உன்னாவ் பெண் எதிர்கொண்டுள்ள சிக்கல்? உதவிக்கரம் நீட்டுமா அரசுகள்?

புது தில்லி: கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த வாடகை பாக்கி வைக்கப்பட்டதால், அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், நீதி கேட்டுப் போராடிய அவரது தந்தையையும் கொலை செய்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு தற்போது 23 வயதாகிறது. திருமணமாகி, இரண்டாவது குழந்தைக்கு தயாராகவிருக்கும் நிலையில், தில்லிக்கு இடம்பெயர்ந்திருந்தார். அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு தில்லி அரசு வாடகை செலுத்த வேண்டும். அதனை உத்தரப்பிரதேச அரசு திரும்ப அளித்துவிடும். இந்த நிலையில், ஜூலை மாதம் முதல் தில்லி அரசு, அப்பெண்ணுக்கான வாடகையை செலுத்தாததால், அவரை வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் மீண்டும் போலியோவா? உலகெங்கும் ஒழிக்கப்பட்டது எவ்வாறு?

என்ன சொல்கிறார் உன்னாவ் பெண்?

உன்னாவ் வன்கொடுமை வழக்கு தில்லியில் நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட பெண் தில்லியில் தங்கியிருக்கிறார். குல்தீப் சிங் செங்கார் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கும் மேல் நீதிமன்றம் சென்று வருகிறேன், தில்லியை விட்டு என்னால் செல்ல முடியாது, ஒரு வேளை செங்காருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால், எனது ஒட்டுமொத்த குடும்பமும் அபாயத்துக்கு உள்ளாகிவிடும். இப்போது எனக்கு தங்கியிருக்கும் வீட்டுக்கே ஆபத்து வந்துவிட்டது, எனது கணவரின் சொற்ப வருமானத்தில் என்னால் வாடகை செலுத்த முடியாது, அரசு கைவிட்டுவிட்டால் நான் தில்லியை விட்டுக் கிளம்ப வேண்டியதுதான் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டை காலி செய்யாவிட்டால், மின்சாரத்தை துண்டித்துவிடுவேன் என்றும், வீட்டை வீட்டு வெளியேற்றுவேன் என்றும் உரிமையாளர் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, உன்னாவ் சிறுமி 16 வயதாக இருந்த போது, பாஜக முன்னாள் எம்எல்ஏ செங்கர் உள்ளிட்டோரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், செங்கர் தண்டிக்கப்பட்டு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை கொலை வழக்கிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் 17 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கா் பாலியல் வன்கொடுமை செய்தாா். இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் தேதி குல்தீப் சிங் செங்கருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து தில்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை