உயிரணு வழங்கியதாக கூறுவது பொய்: மறுப்பு தெரிவித்த எலான்!

உயிரணு வழங்கியதாக கூறுவது பொய்: மறுப்பு தெரிவித்த எலான்!அமெரிக்க செய்தி நிறுவனத்தின் செய்திக்கு மறுப்பு தெரிவித்து எலான் எக்ஸ் பதிவுகோப்புப் படம்

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக எலான் மஸ்க் உயிரணுவை தானமாக அளித்தார் என்ற செய்திக்கு எலான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது சொந்த உயிரணுவை ஆராய்ச்சிக்காக தானமாக அளித்துள்ளார் என்று செய்தி வெளியிட்டது. அதாவது “செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழும் சூழலை ஆராய ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தவையும் அடங்கும். இந்த ஆராய்ச்சிக்காக மஸ்க், தனது சொந்த உயிரணுவை வழங்கியுள்ளார்” என்று கூறியது.

ஆனால், எலான் மஸ்க் அந்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றும், அவர் அவ்வாறு உயிரணுக்களை தானமாக அளிக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆராய்ச்சியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி