உரிமையாளரின் கட்டளையை உடனுக்குடன் நிறைவேற்றும் கோழிகள்

உரிமையாளர் சொல்வதை அப்படியே செய்யும் கோழி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..

கட்டளைக்கு அடிபணியும் கடக்நாத்… வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..

சிலர் வீடுகளில் செல்லமாக வளர்க்கும் கிளி உரிமையாளர்கள் பேசுவதை கேட்டு அப்படியே பேசும், சொல்வதை செய்யும், கவிதை சொல்லும், பாட்டு பாடும். அதுமட்டுமல்லாமல், நாய், பூனை, ஆடு, மாடு கூட அதன் உரிமையாளர்கள் பேசுவதை கேட்டு அப்படியே செய்யும் சம்பவங்களை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

ஆனால் கோழி ஒன்று அதன் உரிமையாளரின் பேச்சைக் கேட்டு அப்படியே செய்வதை நாம் பார்த்திருக்கோமா? ஆம், தெலுங்கானாவில் உள்ள கடக்நாத் கோழி ஒன்று தன் உரிமையாளர் சொல்வதை கேட்டு அப்படியே செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விளம்பரம்

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தில் உள்ள கோழி தான் இத்தகைய செயலை செய்கிறது. இந்த கோழி கடக்நாத் இனத்தைச் சேர்ந்தது. லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த மல்லாரெட்டி என்பவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். அந்த கோழிப்பண்ணையில் உள்ள கடக் நாத் கோழி ஒன்று உரிமையாளர் சொன்னபடி செய்து அனைவரையும் அசர வைக்கிறது.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் ஓவியத்திற்காகப் பெற்ற பாராட்டு… 84 வயதிலும் தீராத கலைத்தாகம்…

உரிமையாளர் அந்த கடக்நாத் கோழியிடம், வா , போ என்று சொன்னால் கோழி வந்து செல்கிறது. கோழியின் இந்த செயலை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உரிமையாளர் அறிவுறுத்தல்களின்படி கோழி சொல்வதை செய்வது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

இச்சம்பவம் குறித்து கோழி உரிமையாளர் கூறுகையில், தனக்கு கோழிப்பண்ணை உள்ளது. அங்கு 200 கடக்நாத் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அங்கிருக்கும் கோழிகளில் ஒன்றுக்கு தன்னை பிடிக்கும் என்றும், இது தனது தோள்களிலும், கால்களிலும் ஏறி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது உரிமையாளர்களின் கட்டளைகளை புரிந்து அதனை பின்பற்றுகிறது.

கோழிக்கும், உரிமையாளருக்கும் இடையே உள்ள புரிதலைக் காண அவரது கோழிப் பண்ணைக்கு ஏராளமான மக்கள் அடிக்கடி வருகின்றனர். இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகும் இந்த வீடியோவில், பண்ணையில் பைக் ஸ்டாண்டிற்கு அருகில் கடக்நாத் கோழி மற்ற கோழிகளுடன் சேருவதற்கு முன் அதன் உரிமையாளர் வழங்கிய அறிவுறுத்தல்களின் படியே முன்னும், பின்னுமாக நடக்கிறது. பொதுவாக கோழிகளை அவற்றின் உரிமையாளர்கள் “ப்ப்ப்ப்ப்ப்ப்பா” என்று அழைக்கிறார்கள். அந்த கோழிகளும் தங்கள் உரிமையாளரின் குரலைக் கேட்டு அதன் வீட்டிற்கு வந்தடையும்.

விளம்பரம்

இதையும் படிங்க: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் காய்கறி விலை… பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் உழவர் சந்தை…

கோழிகளுக்கு உணவளிக்கும் போதோ, கூட்டிற்குள் மூடி வைக்கும் போதோ, சிலர் கோழிகளை ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்றும் சொல்லி அழைப்பார்கள். ஆனால் மல்லரெட்டி பண்ணையில் வளரும் கடக்நாத் கோழிகளில் இருந்து இந்த கோழி சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. உரிமையாளரின் தோள்களில் ஏறி, கால்களில் அமர்ந்து அவருடன் நெருங்கிப் பழகுகிறது. மேலும் கோழியை முன்னால் செல்லச் சொன்னால், அது முன்னாடியும், திரும்பி வரச் சொன்னால், அது திரும்பியும் வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Chicken
,
Viral Videos

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு