உலகக் கோப்பை வெளியேற்றம்..! இந்திய மகளிரணியை கடுமையாக விமர்சித்த மிதாலி ராஜ்!

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியானது. மீண்டும் மீண்டும் ஆஸ்திரேலிய அணியிடமே இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

2016 முதல் ஹர்மன்பிரீத் டி20க்கு கேப்டனாக செயல்படுகிறார். மிதாலி ராஜுக்கு பதிலாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9 முறை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிரணி ஒருமுறைக்கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 4 முறை மட்டும் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. இந்தமுறை அதற்கு முன்னமே வெளியேறியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து முன்னாள் கேப்டனும் இந்திய வீராங்கனையுமான மிதாலி ராஜ் கூறியதாவது:

கேப்டனை மாற்ற வேண்டும்

தேர்வுக்குழு அணியின் கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன். இதுதான் மாற்றத்துக்கான நேரம். இப்போது மாற்றாவிடில் அடுத்தாண்டு மீண்டும் ஒரு உலகக் கோப்பை (ஒருநாள் உலகக் கோப்பை 2025) இருக்கிறது. இப்போது செய்யாவிட்டால் பிறகு செய்யாதீர்கள். ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை விரைவில் வரவிருக்கிறது.

ஸ்மிருதி மந்தனா 2016இல் இருந்து துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், நான் இன்னும் இளமையான 24 வயதாகும் ஜெமிமா மாதிரி ஆள்களை தேர்வு செய்வேன். ஜெமிமா எல்லோரிடமும் கலந்துரையாடுகிறார். அவரது செயல்பாடுகள் இந்தத் தொடரில் சிறப்பாக இருந்தது.

கேமியோ ரோலில் விளையாடினார். அவரது சிறப்பான தொடக்கத்தை பெரிய ரன்களாக மாற்றவில்லை. ஆனால், ஆட்டத்தில் கணத்தை உருவாக்க முடிகிறது.

எந்த முன்னேற்றமும் இல்லை

ஒருநாள் உலகக் கோப்பை மாதிரி டி20 தொடரில் நமக்கு தகவமைக்க நேரம் இருக்காது. நியூசியின் கேப்டன் சோபியா டிவைன் மாதிரி நபர் நமக்கு எதிராக (57 ரன்கள்) அவ்வளவு ரன்கள் அடித்தது கவனிக்கத்தக்கது. ஆடுகளத்துக்கு ஏற்ப நாம் தகவமைக்கவில்லை.

கடந்த 2-3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எந்த அர்த்தத்தில் என்றால் சிறந்த அணியை வீழ்த்த தயாராக வேண்டும். ஆனால் நாம் அந்த விதத்தில் இரு தேக்கநிலையிலேயே இருக்கிறோம். தெ.ஆ. போன்ற மற்ற அணிகள் இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

ஆசிய கோப்பையின்போது நான் வரணனைசெய்து கொண்டிருந்தேன். அப்போது உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி தொடராக விளையாடி வருகிறோம். 70-80 சதவிகதம் திட்டமிடுதல் வேண்டும். ஆனால், நம்.5, நம்.6 யார் என்றே தெரியாமல் விளையாடி வந்தார்கள்.

ஃபிட்னஸ் முக்கியம்

ஆடவர் அணி எப்படி நன்றாக விளையாடுகிறது? ஒரு பெரிய தொடரை இழந்த பிறகு அணியில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். ஆழமாக பேசினால், மற்றவர்களுக்கு நாம் எப்போது வாய்ப்பளிப்போம்?

அதிலும் ஆஸி..க்கு எதிராக ராதா யாதவ், ஜெமிமா தவிர்த்து யாரும் சரியாக விளையாடவில்லை. 11இல் 2 நபர் மட்டுமே விளையாடுவது நல்லதல்ல.

ஃபிட்னஸ் சார்ந்து நாம் ஒரு புதிய அளவுகோலை முன்வைக்க வேண்டும். உண்மையிலேயே ஒரு மாதத்தில் எவ்வளவு நாள் வேலை செய்கிறோம்? ஒரு வருடத்துக்கு எவ்வளவு நாள் எனப் பார்க்க வேண்டும். ஒரு தொடருக்கு முன்பு மட்டுமே பயிற்சி எடுக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் பயிற்சி செய்தால் நிச்சயமாக களத்தில் வித்தியாசம் தெரியும் என்றார்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!