உலகின் ‘நம்பர் 3’ செஸ் வீரரானார் அர்ஜுன் எரிகாஸி..! 5-வது இடத்தில் குகேஷ்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகாஸி உலகின் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைஸி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து சுற்றுக்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் சிறந்த செஸ் வீரர்கள் தரவரிசையில் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை!

உலக செஸ் தரவரிசைப் பட்டியல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன், தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை முந்தி 3-வது இடத்தை தனதாக்கினார்.

ஸ்லோவேனியாவின் ஜான் சுபெல்ஜுக்கு எதிராக வெற்றிபெற்றதன் மூலம் அவர் தனிப்பட்ட சிறந்த நிலையில் 2797.2 புள்ளிகளை எட்டியுள்ளார். இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் அதிகப் புள்ளிகள் பெற்ற இந்திய செஸ் வீரர் என்ற சாதனைக்கும் அர்ஜுன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

20 வயதான அர்ஜுனைவிட ஹிகாரு நகமுரா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

அர்ஜுனைத் தொடர்ந்து மற்றொரு இந்தியரான குகேஷும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

உலக செஸ் தரவரிசைப் பட்டியல் (முதல் 5 இடங்கள்)

1. மாக்னஸ் கார்ல்சன் – 2830.82

2. ஹிகாரு நகமுரா – 2802.03

3. அர்ஜுன் எரிகைஸி – 2797.24

4. ஃபேபியானோ கருவானா – 2795.85

5. குகேஷ் – 2794.1

நியூசி.க்கு 68 ரன்கள் தேவை, இலங்கைக்கு 2 விக்கெட்டுகள் தேவை; வெற்றி பெறப்போவது யார்?

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!