உலகின் மிகப் பணக்கார நகரமாக வாகை சூடியது அபு தாபி!

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது.

பல்வேறு நாடுகளின் அரசுகள் சொந்தமாக நிதிகளை உருவாக்கி, அவற்றை பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருவாய் ஈட்டும். இந்த நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் குளோபல் எஸ்.டபிள்யு.எஃப். சார்பாக உலகிலேயே பணக்கார நகரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு மாத நிலவரப்படி, அபு தாபி அரசு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டு நிதிகளைப் பெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்து, பிடித்துள்ளது.

அதாவது, சோவேரியன் வெல்த் ஃபன்ட் என்பது அரசுகளுக்கான முதலீட்டு நிதியமைப்பாகும். இதில், உலக நாட்டின் அரசுகள் பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பத்திரங்கள் போன்வற்றில் முதலீடு செய்து நிதியைப் பெருக்கும் வழிகளை மேற்கொள்ளும். இந்த நிதி மேலும் பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு மேலும் இந்த நிதி பெருக்கப்பட்டு, ஒரு நாட்டின் அரசு தனது வருவாயை ஈட்டும் மற்றும் பெருக்கும் முறையாகும்.

இதையும் படிக்க.. 3 மணி நிலவரம்.. சென்னையில் அடுத்து பெய்யவிருக்கும் மழை

எனவே, உலகிலேயே அதிக முதலீட்டு அமைப்பைக் கொண்டிருக்கும் நகரம் என்ற அடிப்படையல், உலகிலேயே பணக்கார நகரமாக அபுதாபி இடம்பெற்றுள்ளது. அபுதாபி அரசைப் பொருத்தவரை, எமிரேட்ஸ் முதலீட்டு ஆணைய நிதி மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணைய நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியமைப்புகள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக, அபு தாபி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது