உலகின் மிக உயரமான இரும்பு பாலத்தில் ஓடிய ரயில்

உலகின் மிக உயரமான இரும்பு பாலத்தில் ஓடிய ரயில்… சாதனை படைத்த இந்திய ரயில்வே!

ரயில்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் மிக உயரமான இரும்பு பாலத்தில் ரயிலின் சோதனை ஓட்டத்தை, இந்திய ரயில்வே வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கத்ரா – பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். அதாவது, பாரிஸில் இருக்கும் ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் உயரம் கொண்ட ரயில் பாலமாகும்.

ரூ.14,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் செனாப் ரயில் பாலம், ரூ.35,000 கோடி மதிப்பிலான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் ஒருபகுதியாகும். ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே, மலைகளுக்கு இடையிலும், ஆற்றின் மீதும் கட்டப்பட்டுள்ள செனாப் பாலம், நில நடுக்கம் மற்றும் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்படாது. அத்துடன், ரயில் 100 கி.மீ. வேகத்தில் ரயில் சென்றாலும், பாதிக்கப்படாத வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்படுகின்றன.

விளம்பரம்

அதன் ஒரு பகுதியாக, சஞ்கல்தான் முதல் ரியாசி வரை செனாப் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், அனைத்து கட்டுமானப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகவும், ஒரு சுரங்கப்பாதையில் ஒரு பகுதி மட்டும் முழுமையடையாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1st trial train between Sangaldan to Reasi. pic.twitter.com/nPozXzz8HM

— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 16, 2024

விளம்பரம்

முன்னதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் வழியாக, ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வடக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தேஷ்வால், வரும் ஜூன் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Train

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?