உலக அமைதிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருக்கிறது: ஐ.நா. அவையில் பிரதமர் மோடி!

ஐக்கிய நாடுகள் அவையில் 79-வது பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையில் நிகழ்த்தினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் அவையில் 79-வது பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் இருக்கிறது. போர்க்களத்தில் இல்லை. உலகளாவிய அமைதி, வளர்ச்சிக்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியமானதாகும்.

உலக அமைதிக்கு பயங்கரவாதம் தீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது. இணையவழி, கடல் மற்றும் விண்வெளி போன்ற பகுதிகளிலும் மோதல்கள் உருவாகி வருகின்றன.

இந்தியா தனது இணையவழி பொது உள்கட்டமைப்பை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது” என்றார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி