உலக கால்பந்து தரவரிசை: ஸ்பெயின் அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

யூரோ சாம்பியன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்பெயின் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புதுடெல்லி,

உலக கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நேற்று வெளியிட்டது. இதன்படி உலக சாம்பியனும், கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த அர்ஜென்டினா அணி முதலிடத்திலும், ஐரோப்பிய சாம்பின்ஷிப்பில் (யூரோ) அரைஇறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி 2-வது இடத்திலும் நீடிக்கிறது.

யூரோ போட்டியில் தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்பெயின் 5 இடம் உயர்ந்து 3-வது இடத்தையும், இதன் இறுதிசுற்றில் தோல்வி கண்ட இங்கிலாந்து ஒரு இடம் அதிகரித்து 4-வது இடத்தையும், பிரேசில் அணி ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும், பெல்ஜியம் 3 இடம் சரிந்து 6-வது இடத்தையும் பெற்றுள்ளன. இந்திய அணி 124-வது இடத்தில் மாற்றமின்றி நீடிக்கிறது

Related posts

அஸ்வின் அபார பந்துவீச்சு; வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் – வங்காளதேச முன்னாள் கேப்டன்

டெஸ்ட் கிரிக்கெட்; அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்