உலக நாடுகளின் தலைவர்களை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி…

எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்… உலக நாடுகளின் தலைவர்களை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் அதாவது, 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸை பெற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

எக்ஸ் தளத்தில் அதிகம் பின் தொடரப்படும் உலக தலைவர் என்ற சாதனையையும் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

அந்த வகையில் மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்கிறார். இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.

விளம்பரம்

உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒப்பிடும்போதும் பிரதமர் மோடிதான் முன்னிலையில் இருக்கிறார். 38.1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தற்போதைய துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது (11.2 மில்லியன்) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) போன்ற உலகத் தலைவர்களை விட பிரதமர் மோடி மிகவும் முன்னிலையில் உள்ளார்.

இதையும் படிங்க – அம்பானி வீட்டு திருமண விழா : மணமக்களை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி

X இல் பிரதமர் மோடியின் பிரபலத்தைப் பார்த்து, உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சமூக ஊடகங்களில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர், ஏனெனில் அவருடன் தொடர்புகொள்வது அவர்களின் சொந்த பின்தொடர்பவர்கள், ஈடுபாடுகள் (Impression), பார்வைகள் (Views) மற்றும் மறுபதிவுகளை (RePost) கணிசமாக அதிகரிக்கிறது.

விளம்பரம்

விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்) மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) போன்ற சில ஆக்டிவான உலகளாவிய விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும்போது, ​​பிரதமர் மோடிக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
PM Modi

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி