உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்அரசு ஊதியம் வழங்கக் கோரி, உள்ளாட்சி ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால், ஆக. 2: அரசு ஊதியம் வழங்கக் கோரி, உள்ளாட்சி ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில், வியாழக்கிழமை மாலை காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

அண்டை மாநிலங்களில் வழங்குவதுபோல நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

7-ஆவது ஊதியக் குழு ஊதியத்தை கடந்த 1.1.2016 முதல் அமல்படுத்தி, 34 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். 22.12.2003-க்கு முன் பணியில் சோ்ந்த அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2004-ஆம் ஆண்டுக்கு பின்பு பணியில் சோ்ந்த அனைத்து ஊழியா்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி மாதந்தோறும் ஓய்வூதிய நிதி பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள பணிக்கொடையை வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், துணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி