உ.பியில் சமாஜ்வாதி அதிக இடங்களை அள்ளியது எப்படி?

உ.பியில் பாஜகவை பின்னுக்கு தள்ளி சமாஜ்வாதி அதிக இடங்களை அள்ளியது எப்படி?

அகிலேஷ் யாதவ்

நாட்டிலேயே அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் அதிக இடங்களை வென்ற பாஜக, தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதிலும், குறிப்பாக, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் தோல்வியடைந்ததே சமாஜ்வாதிக்கு பெரிய சாதனை மகுடமாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை 400 இடங்களுக்கு மேல் அழைத்துச் செல்லும் என்று கருதப்பட்ட ராமர் கோயில், உண்மையில் பாஜகவின் காலை வாரிவிட்டது.

விளம்பரம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 62 இடங்களை வென்றது. அப்போது, 37 இடங்களில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதற்கு முன்னதாக, 2014 தேர்தலில் பாஜக 72 இடங்களில் வென்றது.

2017ல் நடந்த உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களில் வென்று பாஜக வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் எண்ணிக்கை 255ஆக குறைந்தது. ஆனால், இந்த முறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பீம்ராவ் அம்பேத்கரை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்த பாஜக, 20% தலித் மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என கருதியது. ஆனால், தலித் மக்கள் தங்களது வாக்குகளை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு செலுத்திவிட்டதையே, தற்போதைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

விளம்பரம்

Also Read :
ஜூன் 07 ஆம் தேதி பாஜக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம்

அதேபோல், யாதவ் மற்றும் முஸ்லீம் வாக்காளர்களின் வாக்குகளையும் பாஜகவால் தக்க வைக்க முடியவில்லை. ஏனெனில், யாதவ் இன மக்களின் வாக்குகளை மட்டும் குறிவைத்து வேலை செய்யாத அகிலேஷ் யாதவ், பிற ஓபிசிகளின் ஆதரவைப் பெற்ற சிறிய கட்சிகளுடனும் கைகோர்த்தார். அதுவே, சமாஜ்வாதி கட்சிக்கான வாக்கு சதவீதத்தை அதிகரித்தது.

அதேபோல், யாதவ் இனத்தைச் சேர்ந்த 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கிய அகிலேஷ் யாதவ், மற்ற ஓபிசி பிரிவைச் சேர்ந்த 27 பேருக்கும், 15 தலித்துகள், 4 பிராமணர்கள், 4 முஸ்லீம்கள், 2 தாக்கூர்கள், 2 வைசியர்களுக்கும் வாய்ப்பை வழங்கியது பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற உதவியது.

விளம்பரம்

ராமர் கோயில் கட்டியதை பாஜக பெருமையாக பிரச்சாரம் செய்து வந்த நேரத்தில், அது பற்றி குறையோ, விமர்சனமோ செய்யாமல், வேலையின்மை, தேர்தல் பத்திர ஊழல், பணவீக்கம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம் செய்தன. இது மக்களிடையே நன்றாக எடுபட்டது. இதுபோன்ற காரணங்களே சமாஜ்வாதி கட்சி பெரிய வெற்றியை பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Akilesh yadav
,
uttar pradesh

Related posts

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு