உ.பியில் பாஜக வீழ்ந்தது எப்படி? யோகிக்கு சிக்கலா?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக போட்டியிட்டார். அப்போது கிடைத்த பெரும் ஆதரவுக்கு மத்தியில் அங்குள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. 2019ல் வலுவான எதிர்க்கட்சி இல்லாத சூழலில், 62 இடங்களை பாஜக கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கைகோர்த்ததால், வெறும் 33 இடங்களை மட்டுமே பாஜக வென்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, கட்சிக்குள் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி வட்டாரத்திலேயே பெரும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஏனெனில் சிட்டிங் எம்.பி.க்கள் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, வேறு சிலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அத்துடன், பிராமணர்கள், ராஜ்புத் மற்றும் ஓபிசி வாக்கு வங்கி அரசியல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ராஜ்புத் வம்சத்தினர் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பது என தீர்மானமே நிறைவேற்றினார்கள்.
விளம்பரம்
மறுபுறம் கிராமப்புறங்களில் போதிய வளர்ச்சியின்மையும், முஸ்லிம்களுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கையும் பாஜகவுக்கு எதிராக திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடாவிட்டாலும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மற்றொரு புறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் சுமார் 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியுள்ளார்.
Also Read :
அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளி 3வது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி
விளம்பரம்
இன்னொரு புறம் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன், யாதவ் பெல்ட் என்று கூறப்படும் பகுதிகளிலும் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை எனக் கூறப்படும் கிழக்கு உத்தரபிரதேசத்திலும் பாஜக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் சமாஜ்வாதி கட்சி, பாஜக மற்றும் காங்கிரசுக்கு அடுத்ததாக, எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
யாதவ் பெல்ட் பகுதியை குறிவைத்து அகிலேஷ் யாதவ் சில முக்கிய முடிவுகளை எடுத்தார். அத்துடன், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முஸ்லீம்களின் வாக்குகளை ஒருங்கிணைத்தது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.
விளம்பரம்
மறுபுறம் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியை புகழ்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் காரணமாக, கிராமப்புற மக்களின் துயரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஜனவரியில் திறக்கப்பட்ட ராமர் கோயில் பாஜகவுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டது.
மேலும், 2022ல் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த யோகி ஆதித்யநாத் பாபா கா புல்டோசர் என்று புகழப்பட்டார். இது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், பெரும்பாலான மக்களுக்கு ஒருவித கலக்கத்தையே கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினரை குறிவைத்து அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்தார். அது உண்மையில் அவருக்கு கைகொடுத்துள்ளது.
விளம்பரம்
நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, 2027 ல் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு புதிய உந்து சக்தியை கொடுத்துள்ளது. அகிலேஷ் யாதவின் எழுச்சியின் காரணமாக, யோகி ஆதித்யநாத் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். எனவே, 2027க்கு முன்னர் யோகி ஆதித்யநாத் சில திருத்தங்களை செய்வார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Lok Sabha Election 2024
,
uttar pradesh