உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று இந்து மத ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்தன்ர். மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் போலே பாபா சாமியார் நடத்திய இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார். இவரை உத்தரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்களை சந்தித்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath meets and inquires about the health of the persons injured in the stampede incident, at Hathras government hospital pic.twitter.com/HW5u4q4ziv

— ANI (@ANI) July 3, 2024

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து