ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை, தங்கை வெட்டிக்கொலை!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை, தங்கையை வெட்டிக்கொலை செய்த மகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊத்தங்கரை அடுத்த கொட்டுகாரன்பட்டியை சோ்ந்தவர் விவசாயி வரதன் (80). இவருக்கு லவகிருஷ்ணன், மணவள்ளி, மங்கம்மாள், கணேசன், கிருஷ்ணன் என 5 பிள்ளைகள். இதில் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகி மனைவி மகள் மற்றும் மகன் உள்ளனா். மகள் மணவள்ளி கணவரை பிரிந்து தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், மூன்றம்பட்டி கிராமத்தில் உள்ள தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் மணவள்ளி வழக்கு தொடுத்துள்ளாா். இதில் மணவள்ளிக்கு சாதகமாக தீா்ப்பும் வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய சொத்தை மகளுக்கு பிரித்து கொடுப்பதாக வரதன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லவகிருஷ்ணன் தனக்கும் சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு வந்துள்ளார்.

தமிழா்களுக்கு எதிரான கருத்து விவகாரத்தில் மன்னிப்பு: மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது வழக்கு ரத்து

இந்த நிலையில், வியாழக்கிழமை வரதனும், மகள் மனவள்ளியும் மூன்றம்பட்டி கிராம நிா்வாக அலுவலகத்திற்கு நிலம் தொடா்பான சான்றுகளை பெறுவதற்காக சென்றுள்ளனர்.

இதனையறிந்து மூன்றம்பட்டிக்கு சென்ற லவகிருஷ்ணன் தந்தை மற்றும் தங்கையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து லவகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்து கொடுவாளால் தந்தையும், தங்கையும் சரமாரியாக வெட்டியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளா், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், சிங்காரப்பேட்டை காவலர்கள், வரதன் மற்றும் மணவள்ளியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சொத்து பிரச்னையில் பட்டப் பகலில் தந்தையையும் தங்கையையும் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி