ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

புதுடெல்லி,

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஊழலுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசாங்கம் எந்த விதத்திலும் தலையிடாது. சட்டத்தின் பிடியில் இருந்து எந்த ஊழல்வாதியும் தப்பிக்க முடியாது என்பதை குடிமக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது மோடியின் வாக்குறுதி.

என்னைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தேர்தலில் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வியின் மூலம் அளவிடப்படுவது இல்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நான் ஊழலை எதிர்த்து போராடவில்லை. அது எனது பணி, எனது நம்பிக்கை.

ஊழல் என்பது தேசத்தை அரிக்கும் கரையான் போன்றது என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கவும், நாட்டு மக்களின் மனதில் ஊழல் மீதான வெறுப்பை விதைக்கவும் நான் பாடுபடுகிறேன்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து