எங்களவிட்டு போகாதீங்க… இங்கேயே இருங்க… பள்ளி மாணவர்கள் மன்றாடல்!!!

எங்களவிட்டு போகாதீங்க… இங்கேயே இருங்க… ஆசிரியரின் காலைப்பிடித்து மன்றாடிய பள்ளி மாணவர்கள்!

கள்ளச்சாராயம்

எங்களவிட்டு போகாதீங்க… இங்கேயே இருங்க… என பள்ளி ஆசிரியரின் காலைப் பிடித்து மாணவ – மாணவிகள் மன்றாடிய காட்சிகள் நெகிழச் செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம், சூர்யா பேட்டை மாவட்டத்தின் பூலமாலா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், சாய்ந்துலு என்பவர் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டதையொட்டி, மாணவ மாணவிகளை அழைத்து அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து, நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறினார்.

அப்போது, ஆசிரியரை பிரியப்போகிறோம் என எண்ணி கண்கலங்கிய மாணவ – மாணவிகள், சாய்ந்துலுவின் காலில் விழுந்து, இங்கிருந்து செல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்டனர்.

விளம்பரம்

ஆனால், மாணவர்களுக்கு பதில் அளித்த ஆசிரியர் சாய்ந்துலு, இது அரசு உத்தரவு, நான் இங்கிருந்து சென்று தான் ஆக வேண்டும் என கூறினார். நான் இங்கு பணியாற்றுவதாக கருதி, நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்திய சாய்ந்துலு, அங்கிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Telangana

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்