எங்களுக்கு எதிராக பிரதமர் மோடி சதி செய்தார்: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தங்களுக்கு எதிராக சதி செய்ததாக தில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினார்.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது, பிரதமர் மோடி எங்களுக்கு எதிராக சதி செய்தார். என்னையும் (ஆம் ஆத்மி கட்சித் தலைவர்) மனீஷ் சிசோடியாவையும் ஊழல்வாதி என்று நிரூபிக்க அவர் சதி செய்தார்.

எங்களின் இமேஜை கெடுக்க முயன்றார். கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி நேர்மையான அரசை நடத்தி வருகிறது. இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குதல், இலவச மருத்துவ சிகிச்சை வழங்குதல், கல்வியை மேம்படுத்துதல் போன்றவற்றை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தேன்.

மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

எங்களை எதிர்த்து வெற்றி பெற, எங்களின் நேர்மையை தாக்க வேண்டும் என்று மோடி நம்பத் தொடங்கினார். இதுவே கேஜரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மியினர் நேர்மையற்றவர்கள் என்று சித்தரித்து ஒவ்வொரு தலைவரையும் சிறையில் தள்ளும் சதிக்கு வழிவகுத்தது. எனக்கு முதல்வர் நாற்காலி மீது பசி இல்லை என்பதால் ராஜிநாமா செய்தேன்.

நான் பணம் சம்பாதிப்பதற்காக இங்கு வரவில்லை. நாட்டின் அரசியலை மாற்றுவதற்காக வந்துள்ளேன். 75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்கிற விதி பாஜகவில் உள்ளது. இது பிரதமர் மோடிக்கு பொருந்தாதா?. இந்நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் அதிஷி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்