எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

கூட்டத்தில், கூட்டணிக்கான வியூகம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால், அதுவரை மக்கள் பிரச்சினைகளை வெளியே கொண்டுவந்து போராட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாகவே உட்கட்சித்தேர்தலை நடத்த தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.கிளைச்செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை விரைவில் உட்கட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் ஒன்றாக இருந்தபோது அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

Related posts

சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!

லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட் விற்பனையை நிறுத்தியது மீஷோ!

கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்