எதிர்கட்சி தலைவராக தேர்வாகிறாரா ராகுல் காந்தி..? இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டம்..
ராகுல் காந்தி
டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸின் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரம்
இதையும் படிக்க:
நாடாளுமன்றம் செல்லும் புதிய எம்.பி.க்கள் – என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா?
அதனை தொடர்ந்து, பிற்பகல் 1 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மாலை 5.30 மணிக்கு, நாடாளுமன்ற வளாகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில், அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவுறுத்தியுள்ளார்.
விளம்பரம்
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராகவும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
India Alliance
,
Lok Sabha Election 2024
,
Rahul Gandhi