எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி? – காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்…
ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு உள்பட 99 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இத்தேர்தலில் பாஜகவுக்கு அடுத்து அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
“விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” – தேர்தல் ஆணையத்தை அணுகிய பிரேமலதா விஜயகாந்த்!
விளம்பரம்
தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வென்ற மற்றவர்களும் இதையே விரும்புவார்கள் என தான் நம்புவதாகவும் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Congress
,
Lok Sabha Election Results 2024
,
Rahul Gandhi