“எனது பேச்சை யாராலும் கட்டுப்படுத்த முடியாது” – பிரதமர் மோடி ஆவேசம்!

“எனது பேச்சை யாராலும் கட்டுப்படுத்த முடியாது” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

மோடி

தனது பேச்சை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த அவர், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, கட்சி வித்தியாசங்கள் கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

பட்ஜெட் கூட்டத்தொடரை மொத்த தேசமும் எதிர்பார்த்துள்ளதாக கூறிய அவர், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்றார். தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகள் அனைவரும் நாட்டுக்காக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக எதிர்க்கட்சிகள் நேரத்தை வீணடிக்கின்றன என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 13 மாத சிறை, அறுவை சிகிச்சை – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வேதனை!

விளம்பரம்

நாடாளுமன்ற தேர்தல் கால யுத்தம் முடிவடைந்துவிட்டது. இனி 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காலத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் விளையாடுவோம்; அதுவரை இந்த 4.5 ஆண்டுகளும் மக்கள் நலனுக்காக அரசுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
PM Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்