என்னுடைய ஆக்சன் படத்தை இன்னும் எடுக்கவில்லை: லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் தன் திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம், ‘உங்கள் திரைப்படங்களில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்கிற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிக்க: வேட்டையன் வசூல்!

அதற்கு லோகேஷ் கனகராஜ், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எடுக்க நினைத்த ஆக்சன் திரைப்படத்தை இன்னும் எடுக்கவில்லை. கைதி திரைப்படத்தின் சென்சாரின்போதே எங்கெல்லாம் பிரச்னை வரும் என தெரிந்தது. ஒரு ஆக்சன் திரைப்படத்தை அப்படியே எடுக்க முடியாது. என் படங்களில் இயற்பியல் விதிகளுக்கு மாறாக எந்த சண்டைக்காட்சிகளும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

அதனால்தான், என் சண்டைக்காட்சிகள் எதார்த்தமாகவும் அப்பட்டமாகவும் இருக்கின்றன. எனக்கு கில் பில் (kill bill) போன்ற ஆக்சன் படத்தைத்தான் எடுக்க ஆசை. ஆனால், கில் பில் மாதிரியான படங்களை இங்கு எடுக்கவும் வெளியிடவும் முடியாது. பழத்தில் ஊசியேற்றும் வேலையைத்தான் நம்மால் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!