என்னுடைய கனவு நினைவான தருணம் அது – சஞ்சு சாம்சன்

இலங்கை டி20 தொடரில் தாம் சிறப்பாக செயல்படவில்லை என்று சஞ்சு சாம்சன் ஒப்பு கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடியது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஒருநாள் தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.

டி20 தொடரிலும் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் 2வது மற்றும் 3-வது போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதனால் சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதில்லை அவரை ஆதரித்த ரசிகர்களே அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் இலங்கை டி20 தொடரில் தாம் சிறப்பாக செயல்படவில்லை என்று சஞ்சு சாம்சன் ஒப்பு கொண்டுள்ளார். அதே சமயம் 2024 டி20உலகக் கோப்பையை இந்திய அணியுடன் சேர்ந்து வென்றது தம்முடைய மிகப்பெரிய கனவு நினைவான தருணம் என்று அவர் பெருமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கடைசி 3 – 4 மாதங்கள் எனது கெரியரில் சிறந்த நேரம் என்று சொல்வேன். டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கமாக இருந்தது கனவு நினைவான தருணம். அதற்காக நான் கடந்த 3 – 4 வருடங்களாக விரும்பினேன். ஆனால் அணியில் இணைந்த பின்புதான் டி20 உலகக்கோப்பையை வெல்வது எளிதான விஷயமல்ல என்பதை உணர்ந்தேன்.

ஆனால் கடந்த இலங்கைத் தொடரில் நான் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக செயல்படவில்லை. அதே சமயம் மலையாள மக்கள் மற்றும் இந்திய மக்களிடம் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் எனக்கு கிடைத்த ஆதரவு அளப்பரியது. அதனால் நீங்கள் எங்கே சென்றாலும் உங்களுக்கு ஆதரவு கிடைப்பதாக மற்ற இந்திய வீரர்கள் என்னிடம் சொல்வார்கள். ஆனால் அந்த ஆதரவுக்கு மத்தியில் நான் டக் அவுட்டானதாலேயே ஏமாற்றமடைந்தேன்" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா