என்ன ஆனது? டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 11% வீழ்ச்சியா?

தமிழ்நாட்டில் மதுபானங்களை விற்பனை செய்துவரும் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பீர் வகைகள் விற்பனை சுமார் 11 சதவீதம் சரிந்திருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

பெண் மருத்துவர் உடல் கூறாய்வு நடந்தது எப்படி? செல்லான் இல்லாததால் உச்ச நீதிமன்றம் கேள்வி

அதுபோல, இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்ற மதுபானங்களின் விற்பனையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதாவது 0.45 சதவீதம் சரிவைக் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து ஆராயுமாறு மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது, மேலும், பீர் விற்பனை 5 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவடைந்த டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை ஆராயவும், மாவட்ட மேலாளர்களிடம் இது குறித்து விளக்கம் பெறவும், ஒருவேளை, டாஸ்மாக் கடைகள் தரப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்ட மேலாளர்கள் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கப்பதற்கு எந்த நோக்கமும் இல்லை, ஆனால், விற்பனையில் சற்று சரிவை ஏற்பட்டுள்ளதால், அதற்குக் காரணம் என்ன என்பது கண்டறியப்படுவது அவசியம், போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்றும் ஆய்வு நடத்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

மும்பை லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ஒரே நாளில் ரூ.50 லட்சம் நன்கொடை

எந்த அளவுக்கு வீழ்ச்சி?

கடந்த ஆகஸ்ட் மாதம், டாஸ்மாக் கடைகளில் 29,79,527 பீர் பெட்டிகள் (ஒரு பெட்டியல் 12 பாட்டில்கள் இருக்கும்) விற்பனையாகின. கடந்த ஆண்டு, இதே மாதத்தில் 33,36,075 பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 14.82 சதவீதம் சரிவடைந்துள்ளது. திருச்சி அடுத்த இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 4,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்