எமர்ஜிங் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆப்கானிஸ்தான்

எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது. இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், இலங்கை ஏ – ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity