எம்எல்சி டி20 தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்!

எம்எல்சி டி20 தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்! அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஸ்டீவ் ஸ்மித்படம்: மேஜர் லீக் கிரிக்கெட் /எக்ஸ்

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன.

இதில் வாஷிங்டன் ஃபீரிடம் என்ற அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த அணி 5 போட்டிகளில் 4 வென்று (ஒரு ஆட்டம் நடைபெறாமல்) 9 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் புறக்கணிக்கப்பட்டார். அத்துடன் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலும் ஸ்மித் தேர்வாகவில்லை. இந்நிலையில் வாஷிங்டன் ஃபீரிடம் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். கேப்டனாகவும் அற்புதமாக செயல்பட்டு வரும் ஸ்மித் கேட்ச், ரன் அவுட், சிக்ஸர்கள் அடிப்பது என அனைத்து துறைகளிலும் கலக்கி வருகிறார்.

பௌலராக தொடங்கி டெஸ்டின் தலைசிறந்த பேட்டர் என்ற புகழுக்கு உயர்ந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் டி20 போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். பிபிஎல் போட்டிகளிலும் ஸ்மித் அதிரடியாக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிபிஎல் போட்டிகளில் 31 இன்னிங்ஸில் 1026 ரன்கள், 142 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடுகிறார். எம்.எல்.சியில் இந்தாண்டு மட்டும் 5 போட்டிகளில் 134 ரன்கள், ஸ்டிரைக் ரேட் 134, சராசரி 67 ஆக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்