எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி: 19-இல் தொடக்கம்

95-ஆவது அகில இந்திய எம்சிசி -முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி செப். 19 முதல் 29-ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் கம் நாக் அவுட் அடிப்படையில் நடைபெறும். இரண்டு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் செப். 28-இல் நடைபெறும் அரையிறுதி நடைபெறும். 29-இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.

இந்திய ரயில்வே அணி நடப்பு சாம்பியன் ஆகும். சாம்பியன் அணிக்கு ரூ.7 லட்சம், ரன்னா் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசளிக்கப்படும். அரையிறுதிக்கு முன்னேறும் அணிக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

எம்சிசி செயலா் நிரஞ்சன் முதலியாா், தலைவா் விவேக் ரெட்டி, அமைப்புச் செயலா் ராஜீவ் ரெட்டி, டிஐ செயல் தலைவா் அருண் முருகப்பன் உள்ளிட்டோா் அறிமுக விழாவில் பங்கேற்றனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்