எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க வந்த அதிமுகவினரை அனுமதித்த சிறை காவலர் சஸ்பெண்ட்

எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க வந்த அதிமுகவினரை அனுமதித்த சிறை காவலர் சஸ்பெண்ட்

திருச்சி: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க வந்த அதிமுகவினரை, சிறை வாயில் வரை அனுமதித்த தலைமைக் காவலர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தைமோசடி செய்ததாக எழுந்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் கடந்த 31-ம்தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அப்போது, அவரை வரவேற்கஅதிமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் சிறை வளாகத்தில் திரண்டனர். அவர்கள், கோஷம்எழுப்பி விஜயபாஸ்கரை வரவேற்றனர்.

இதற்கிடையே, விதிகளை மீறி சிறை வாயில் வரை அதிமுகவினர் அனுமதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரிக்குமாறு, சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி சிறைத் துறை பொறுப்பு டிஐஜி பழனி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, சம்பவத்தன்று பணியில் இருந்த சிறைத் துறை தலைமை காவலர் கணேஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பணியில் இருந்த காவலர்கள் காளிமுத்து, சக்திவேல், அசாருதீன் ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு கேட்டு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு