எம்.எல்.ஏ முகேஷ் பதவி விலகத் தேவையில்லை – கம்யூனிஸ்ட் கட்சி முடிவு…

எம்.எல்.ஏ முகேஷ் பதவி விலகத் தேவையில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு….

கேரளாவில் பாலியல் புகாருக்குள்ளான நடிகரும், எம்.எல்.ஏ-வுமான முகேஷ் பதவி விலகத் தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகரான முகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், முகேஷ் மீது இரண்டு நடிகைகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், முகேஷ் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

காங்கிரஸ் கட்சியிலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில், முகேஷ் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் கூறியிருந்தார். முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, தன் மீது குற்றம் இல்லை என முகேஷ் விளக்கம் அளித்திருந்தார்.

இதையும் படிக்க:
ஹரியானா தேர்தல் தேதி அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முகேஷ் எம்.எல்.ஏ-வாக தொடரலாம் எனவும், அவர் மீதான சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
actor
,
kerala
,
Sexual Complaint

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!