எம்.பி.க்களின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எம்.பி.க்களின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் ஒவ்வொருவருக்கும் சம்பளம் எவ்வளவு? அவர்களுக்கான சலுகைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றிய நிலையில், இந்தியா கூட்டணி 232 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்க தயாராக உள்ள நிலையில், அவர்களது சம்பளம் மற்றும் சலுகைகளை பார்க்கலாம்.

ஒரு எம்.பி.க்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது. அத்துடன், அலவன்சாக மாதந்தோறும் ரூ.70,000 வழங்கப்படுவதோடு, அலுவலகங்களை பராமரித்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.60,000 வழங்கப்படுகிறது. அதேபோல், நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் குழு கூட்டங்களின்போது பங்கேற்கச் சென்றால், தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றுக்காக நாள்தோறும் ரூ.2,000 பெற உரிமை உண்டு.

விளம்பரம்

அதேபோல், எம்.பி.க்களும், அவர்களது குடும்பத்தினரும் ஆண்டுக்கு 34 முறை உள்நாட்டு விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம். அதேபோல், வேலை நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ரயில்களில் முதல் வகுப்பு பெட்டியில் நாட்டின் எந்த பகுதிக்கும் இலவசமாக பயணிக்கலாம். அதேபோல், எம்.பி.க்கள் தங்களது தொகுதிக்குள் சாலை வழியாக பயணித்தால், அதற்கும் படி வழங்கப்படும்.

இதையும் படிக்க:
ராகுல் காந்திக்கு ஜாமீன் – பாஜக தொடர்ந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பதவியில் இருக்கும் 5 ஆண்டுகளுக்கு வாடகையில்லா தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன. சீனியாரிட்டியை பொறுத்து அவர்களுக்கு பங்களா, பிளாட் அல்லது ஹாஸ்டல் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. இவை வேண்டாம் என்றால், அதிகபட்சமாக மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை வாடகைப் படியாக வாங்கிக் கொள்ளலாம்.

விளம்பரம்

அத்துடன், எம்.பி.க்களும், அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவையைப் பெறுவதற்கு உரிமை உண்டு. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ சிகிச்சை பெறலாம்.

இதையும் படிக்க:
பிரதமர் மோடி பதவியேற்பு – மாலத்தீவு அதிபருக்கு அழைப்பு!

அத்துடன், எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் 1,50,000 இலவச தொலைபேசி அழைப்புகளும், தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இலவச அதிவேக இணைய சேவையும் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை இலவச மின்சாரமும், 4,000 லிட்டர் இலவச குடிநீரும் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முறை பதவி வகித்த பிறகு மாதந்தோறும் ரூ.25,000 ஓய்வூதியமும், ஒவ்வொரு கூடுதல் ஆண்டு சேவைக்கும் மாதத்திற்கு ரூ.2,000 ஊதிய உயர்வும் வழங்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Salary

Related posts

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு