எல்ஐகே முதல் பாடல்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: பிராந்திய மொழிப் படங்களை தயாரிப்பது ஏன்? பிரியங்கா சோப்ராவின் அம்மா கூறியதென்ன?

இப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்தால், இது சயின்ஸ் பிக்சனுடன் இணைந்த காதல் கதையாக இருக்கலாம் என தோன்றுகிறது.

இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் தீமா என்கிற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை அனிருத் இசையமைத்து, பாடியுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது