எல்லையில் மோதல்: 8 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு அருகே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுடன், ஆப்கன் தலிபான்கள் நடத்திய மோதலில் எட்டு தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை காலை பாக்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாலோசின் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சோதனை சாவடியின் மீது ஆப்கானிஸ்தான் தரப்பு கனரக ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இன்று குர்ரம் எல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் எட்டு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர், பாகிஸ்தான் படைகளின் பதில் தாக்குதலில் இரண்டு முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது ஆப்கானிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்