எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களையும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING || நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்கள் கைது
3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்வதாக தகவல்#Tamilnadu#Fishermen#arrested#SriLankapic.twitter.com/G6BcsW84Cg

— Thanthi TV (@ThanthiTV) July 11, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!