எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீன் பிடிதடைக்காலம் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!