ஏக்தா கபூர் மீது போக்ஸோ வழக்கு..! தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

தயாரிப்பாளர் ஏக்தா கபூர், அவரது அம்மா ஷோபா கபூர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

காந்தி பாட் என்ற இணையத் தொடரில் குழந்தைகளை தவறாகக் காட்சிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், மும்பை காவல்துறையினர் ஏக்தா கபூரையும் அவரது தாயையும் போக்ஸோ வழக்கில் விசாரித்துள்ளார்கள்.

கந்தி பாட் தொடரில் 6ஆவது சீசனில்தான் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. பிப்.2021 – ஏப்.2021 வரை ஆல்ட் பாலாஜி செயலியில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

ஓடிடி குறித்த இந்தியாவின் புதிய விதிமுறைகளால் பின்னர் ஜீ5 செயலியில் இருந்தும் நீக்கப்பட்டது. சச்சின் மொஹித் இதை இயக்கியிருந்தார். தற்போது இந்தச் செயலியில் அந்தக் காட்சிகள் ஒளிபரப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஏக்தா கபூரின் தயாரிப்பில் கடைசியாக லவ், செக்ஸ் அர் தோகா 2 படம் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியானது. இதனை திபாகர் பானர்ஜி இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப்படம் பெரிதாக வசூலிக்கவில்லை.

இதன் தயாரிப்பு நிறுவனமான ஏஎல்டி பாலாஜி டெலிஃபிலிம்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

கந்தி பாட் இணையத்தொடர் குறித்து பல ஊடகங்களில் வெளிவரும் பிரச்னை குறித்து ஏஎல்டி பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளிக்கிறது. போக்ஸோ உள்பட அனைத்து சட்டத்துக்கும் உள்பட்டே இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல் பொய்யானது.

மேலும் குறிப்பாக ஷோபா கபூர், ஏக்தா கபூர் நிறுவனத்தில் தினமும் நடைபெறும் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. இதற்கெல்லாம் தனியாக அணிகள் இருக்கின்றன. எந்த வகையான கதையென தேர்வு செய்யவும் தனிக் குழுக்கள் உள்ளன.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். சட்டத்தின்மீது முழுமையான நம்பிக்கையுள்ளது. வழக்கு முடியாதிருக்கிற நிலையில் இது குறித்து விரிவாக பதிலளிப்பதில் இருந்து தவிர்த்து வருகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் பாலாஜி டெலிஃபிலிம்ஸில், இணை நிர்வாக இயக்குநராகவும் கிரியேட்டிவ் ஹெட்டாகவும் பணியாற்றி வருகிறார்.

நடிகர் ஜிதேந்திராவின் மகளான இவருக்கு இந்த வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஊழியர்களின் நலனுக்காக தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை வழங்குவதாகப் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார்.

Related posts

விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்: உடனே அகற்ற மேயா் பிரியா உத்தரவு

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்