ஏடாகூட அலப்பறை… புனே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் அம்மா அதிரடி கைது!

துப்பாக்கியை காட்டி மிரட்டல்: முறைகேடு புகாரில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜாவின் தாயார் கைது

பூஜா கேத்கர்

ஏடாகூடமாக அலப்பறைகள் செய்து சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்கரின் தாயார் மனோரமாவை புனே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ரா மாநிலம் புனே ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்கர், தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், தான் சென்ற காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் தொடர்பான சில போலி ஆவணங்களைத் தந்து பூஜா பணியில் சேர்ந்ததாகவும், கேட்கரின் பெற்றோர் மீதும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பூஜாவை அனைத்து வகையான பயிற்சிப் பணிகளில் இருந்து விடுவித்தது மகாராஷ்டிரா அரசு.

விளம்பரம்

இந்த நிலையில், பூஜாவின் தாய் மனோரமா கேட்கர், நில விவகாரம் தொடர்பாக, புனே மாவட்டம் தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ அண்மையில் வைரலானது. இதையடுத்து, பூஜாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வந்தனர்.

இதையும் படிங்க:
சர்ச்சை ஐஏஎஸ்அதிகாரி பூஜா கேத்கர் மீது அடுத்த அதிரடி…. அரசு முக்கிய ஆணை

தற்போது பூஜாவின் தாய் மனோரமாவை, சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே காவலர்கள் கைது செய்தனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Maharashtra
,
Pune

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்