ஏன்டா டேய்… கடவுளுக்கு இப்படி எல்லாமா கடிதம் எழுதுவீங்க!

சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய இளைஞர் – திருமணம் ஆகாத விரக்தியில் வைத்த நூதன கோரிக்கை!

தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதைப் போல, வடமாநிலங்களில் தற்போது சாவன் மாதம் நடைபெறுவதால், மக்கள் தங்களது விருப்பங்களை சிவபெருமானுக்கு விரதம் மற்றும் வழிபாடுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் துலாபாரம் மற்றும் காவடிகளை சுமந்து கொண்டு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஹரித்வார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் புனித தலங்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.

சாவன் மாதத்தில் வடமாநிலங்களில் பக்தர்கள் நீண்ட தூரம் பாத யாத்திரை செல்வதும், வழிபாடு நடத்துவதும் வழக்கமானது என்றாலும், திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் சிவபெருமானுக்கு எழுதிய கடிதம் தான் தற்போது பாதயாத்திரை பக்தர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

விளம்பரம்

இளைஞர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இருக்கும் முகவரியை பார்த்த தபால்காரர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், அதில் இருந்தது சிவபெருமானின் கயிலாய மலைக்கு என முகவரி இருந்தது. இந்த கடிதத்தின் முகவரியை பார்த்து ஏற்கெனவே அதிர்ச்சி அடைந்த தபால்காரர், இருக்கும் தகவலை படித்தபோது, அவருக்கு மாரடைப்பே வந்துவிட்டது. ஆம்! பலமுறை முயற்சி செய்தும் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், கடைசி நம்பிக்கையாக இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:
வக்ஃப் சட்டத் திருத்தம் : காங்கிரஸை சாடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

விளம்பரம்

அதில், “பலமுறை முயற்சித்தும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இனி காதல் திருமணமாக இருந்தாலும், நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம்” என்பதோடு, சிவபெருமானே பெண்ணாக மாறி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்த இளைஞர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். இதற்காக ஒரு கிலோ கஞ்சாவை காணிக்கையாக தருவதாகவும் இளைஞர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Hindu Temple
,
letter
,
Lord shiva
,
Sivan

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்