ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: வீடுகளில் முடங்கிய மக்கள்

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: வீடுகளில் முடங்கிய மக்கள்

சேலம்: ஏற்காட்டில் கனமழையை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவும் , கனமழையும் நீடித்து வருகிறது. கடந்த 9-ம் தேதி இரவு கனமழை கொட்டியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று பகல் வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

ஏற்காடு நகர பகுதி, நாகலூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோயில், பகோடா பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையாக மூடுபனி நிலவியது. குளிரால் மக்கள் அத்தியாவசிய தேவைக்காககூட வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு