ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரி செய்ய ஆர்வம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். படகு சவாரி செய்ய அதிகமானோர் குவிந்துள்ளனர். எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என‌ 3 நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனால் சாலையோர கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், படகு சவாரி செய்ய அலைமோதியது மக்கள் கூட்டம். படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்கின்றனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார விடுமுறை என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகைபுரிந்துள்ளனர்.

இதையும் படிக்க.. பிச்சை எடுங்கள்.. சொத்துக்காக கொடுமைப்படுத்திய பிள்ளைகள்! பெற்றோர் எடுத்த முடிவு?

அதனால் சேலத்தின் புகழ் சொல்லும் இடமாகவும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள குவிந்துள்ளனர். வழக்கமாகவே விடுமுறை நாள்களில் இங்கு ஏராளமான மக்கள் குவிவது வழக்கம். ஏராளமான பூங்காக்கள், படகு சவாரி, சுவையான உணவகங்கள் என இங்கு வரும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க பல விஷயங்கள் உள்ளன.

ஏற்காட்டிலுள்ள முக்கிய இடங்களான அண்ணா பூங்கா, படகு இல்லம், லேடிஸ் சீட், சேர்வராயன் மலை, அண்ணாமலையார் கோயில் மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பத்துடனும் நண்பர்களும் பொழுதை களித்து வருகிறார்கள்.

மேலும் ஏற்காட்டில் லேசான குளிரும் சாரல் பனி பொலிவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Related posts

குறுகிய காலத்தில் நிறைவடைந்த மீனா தொடர்!

அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலி

பிச்சை எடுங்கள்.. சொத்துக்காக கொடுமைப்படுத்திய பிள்ளைகள்! பெற்றோர் எடுத்த முடிவு?