ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

சேலம் : தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள் விடுமுறையை தொடர்ந்து ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 மணி நேரமாக வாகனத்துக்குள்ளேயே மக்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. கவரப்பேட்டை ரயில் விபத்து: பழிசுமத்தும் விளையாட்டு ஆரம்பம்!

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.குறிப்பாக அரசு விடுமுறை,வார இறுதி நாள்களில் சுற்றுலா பயணிகள்‌ அதிக அளவில் வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்றிலிருந்து மூன்று நாள்கள் அரசு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று முதலே ஏற்காட்டில் குவிந்தனர். இன்று காலையும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காடு வந்ததால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எங்குப் பார்த்தாலும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல், சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வாகனங்களை நிறுத்துமிடத்தைத் தேடுவதற்கே அதிக நேரமானது.

இன்று மாலை ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை மற்றும் ஏரி பூங்கா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக ஒரே இடத்தில் வாகனங்கள் சிக்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று முன்கூட்டியே காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தால் இப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்காது என்பது சுற்றுலா பயணிகளின் கருத்தாக உள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!