ஐஐடி-புவனேஸ்வரம் மாணவி தற்கொலை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஐஐடியில் படித்து வந்த மாணவி, நிர்வாகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

ஐஐடி புவனேஸ்வரத்தில் படித்து வந்த 23 வயதாகும் மாணவியின் உடலை, ஐஐடி வளாகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

பலியான மாணவி கிருத்திகா ராஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இவர் தில்லியைச் சேர்ந்தவர் என்பதும், கிருத்திகா ராஜ் ஐஐடி-புவனேஸ்வரத்தில் மூன்றாமாண்டு பி.டெக் படித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஐஐடி-புவனேஸ்வரத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் நூலகம் செயல்பட்டு வருவதாகவும் அங்கிருந்து அவர் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கல்வி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் போலியோவா? உலகெங்கும் ஒழிக்கப்பட்டது எவ்வாறு?

உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி, விசாரணையைத்தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை