ஐசிசி மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு!

ஐசிசி மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு!மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது.படம் | பிசிசிஐ

மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் பேட்டிங்கில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஷஃபாலி வர்மா பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஹர்மன்பிரீத் கௌர் ஒரு இடமும், ஷஃபாலி வர்மா 4 இடங்களும் முன்னேறி இருவரும் 11-வது இடத்தில் உள்ளனர்.

பேட்டிங் தரவரிசையில் முதல் 20 இடங்களில் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 4-வது வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளார். ரிச்சா கோஷ் 24-வது இடத்தில் உள்ளார். 769 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்தில் தொடர்கிறார்.

பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3-வது இடத்தில் தொடர்கிறார். ரேனுகா சிங் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான ராதா யாதவ் 20-வது இடத்தில் உள்ளார். ஸ்ரேயங்கா பாட்டீல் 19 இடங்கள் முன்னேறி 41-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் 772 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Related posts

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? – ராமதாஸ்

சிறந்த கைத்தறி நெசவாளர், வடிவமைப்பாளர்களுக்கு விருது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்