ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது: அலைஸ்டர் குக், ஏபி டிவில்லியர்ஸுக்கு கௌரவம்!

ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ், அலைஸ்டர் குக் ஆகியோர் இணைந்துள்ளனர்.

ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பு அளித்த வீரர்கள் இந்த விருது பட்டியலில் இடம்பெறுவர்.

‘மிஸ்டர் 360’ என்றழைக்கப்படும் தென்னப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் – பேட்டர் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிரணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நீத்து டேவிட் ஆகிய மூவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..: கிரீனுக்கு பதிலாக பந்துவீச தயாராகும் மிட்செல் மார்ஷ்!

அலைஸ்டர் குக்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலைஸ்டர் குக், அந்த அணிக்காக 250 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் டெஸ்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் 12472 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 12 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அதுபோக இங்கிலாந்துக்காக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அலைஸ்டர் குக் 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

இதையும் படிக்க..: ஆஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியீடு! 40 ஆண்டுகால வழக்கத்தை மாற்றிய ஆஸி!

ஏபி டிவில்லியர்ஸ்

தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துவிதமாக போட்டிகளில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார்.

‘மிஸ்டர் 360’ என்றழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ்
தென்னாப்பிரிக்காவுக்காக அதிவேக அரைசதம், சதம், 150* ரன்கள் அடித்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அச்சம் தரக்கூடிய கிரிக்கெட்டர் என்ற பெயரும் பெற்றவர் ஏபி டிவில்லியர்ஸ்.

இதையும் படிக்க..: நாட்டைவிட குடும்பமே முக்கியம்: பாட் கம்மின்ஸ் அதிரடி!

Mr 360 inducted in the ICC Hall of Fame
Saluting the impeccable brilliance of AB de Villiers pic.twitter.com/vhJ9Z6GYzG

— ICC (@ICC) October 16, 2024

நீத்து டேவிட்

இந்திய மகளிரணியின் சுழற்பந்து வீச்சாளரான நீத்து டேவிட் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தவர். இதுவரை இந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. நீத்து டேவிட் ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சாதனைப் பட்டியலில் இணைந்த 2-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். நீத்து டேவிட் தற்போது இந்திய அணியின் தேர்வாளர்கள் குழுத் தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி இந்த சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.

நீத்து டேவிட் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் மற்றும் 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதையும் படிக்க..: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாக். 366 ரன்களுக்கு ஆல்-அவுட்!

47 வயதான நீத்து டேவிட் 141 விக்கெட்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீராங்கனையாக உள்ளார். மேலும் 50 ஓவர் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதுகுறித்து நீத்து டேவிட் கூறுகையில், “ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவது உண்மையிலேயே ஒரு மரியாதை. இது அவர்களின் தேசிய அணி ஜெர்சியை அணியும் எவருக்கும் கிடைக்கும் மிக உயர்ந்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நீத்து டேவிட் 2006- ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..: இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்ட்: மழையால் டாஸ் தாமதம்!

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!