ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தனியார் தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், நாளை முதல் நான்கு நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், முன்னெச்சரிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மேலும், நாளை முதல் அக். 18ஆம் தேதி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது