ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

பரவலான நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் பலவீனமான உற்பத்தி தரவுகளுக்கு மத்தியில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று (அக்டோபர் 1-ஆம் தேதி) நிஃப்டி 25,800 க்கும் கீழே சரிந்தன.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் குறைந்து 84,266.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 13.95 புள்ளிகள் குறைந்து 25,796.90 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

அதே வேளையில் இண்டஸ்இண்ட் பேங்க், ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மீடியா, ஆட்டோ, ஐடி உள்ளிட்ட துறை பங்குகளை முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பி வாங்கியுள்ள நிலையில் டெலிகாம், பவர், எஃப்எம்சிஜி, ஆயில் & கேஸ் மற்றும் ரியால்டி துறை பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர்.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3 சதவிகிதமும் உயர்ந்தும் ஸ்மால்கேப் குறியீடு 0.5 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.

அக்சோ நோபல், பல்ராம்பூர் சினி, பிஏஎஸ்எஃப், பாம்பே பர்மா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், தீபக் பெர்டிலைசர்ஸ், ஈஐடி பாரி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ஜேஎம் பைனான்சியல், லாயிட்ஸ் மெட்டல்ஸ், மெட்ரோபோலிஸ், நால்கோ, பாலிகேப் இந்தியா, ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், வி-மார்ட் ரீடெய்ல் உள்ளிட்ட 239 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை தொட்டது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ சந்தை உயர்ந்து வர்த்தகமானது. தென் கொரியா, ஹாங்காங் மற்றும் சீன சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.9,791.93 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.6,645.80 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.66 சதவிகிதம் குறைந்து பீப்பாய் 70.51 டாலராக உள்ளது.

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகள் நாளை (அக்டோபர் 02 ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!