ஐபிஎல் தொடரில் வீரர்கள் தக்கவைப்பு குறித்து பேசிய சிஎஸ்கே முன்னாள் வீரர்!

ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துக் கொள்வது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது அணிகள் தங்களுக்கு தேவையான 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. மெகா ஏலம் நிறைவடைந்து மூன்று ஆண்டு காலம் நிறைவடைந்ததையடுத்து, அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்புகிறாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?

எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம்

கடந்த 2022 ஆம் ஆண்டு 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிலர் 8 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ள அனுமதி கேட்டு வருகின்றனர். சிலர் 4 அல்லது 5 பேரை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டாலே போதுமானது என கருதுகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் ஐபிஎல் நிர்வாக குழுவே இறுதி முடிவினை எடுக்க வேண்டும்.

அம்பத்தி ராயுடு கருத்து

ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிகளில் வீரர்கள் தக்கவைக்கப்படுவது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பத்தி ராயுடு (கோப்புப் படம்)

வீரர்கள் தக்கவைப்பு குறித்து ராயுடு பேசியதாவது: அணிகள் அதிகமான வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், அணி நிர்வாகம் வீரர்களுக்கு அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். அந்த வீரர்கள் அணியை தனித்துவமாக மாற்றுகிறார்கள்.

கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்: ரோஹித் சர்மா

அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள். ஒருவர் அல்லது இரண்டு பேரை மட்டும் தக்கவைக்க அனுமதிக்கக் கூடாது. அதிக அளவிலான வீரர்களை தக்கவைக்க அணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்