ஐபிஎல் தொடரைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகள் 100 சதவிகிதம் முக்கியம்: முன்னாள் இந்திய வீரர்

ஐபிஎல் தொடரைக் காட்டிலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் 100 சதவிகிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் உள்ளூர் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் போட்டிகள் மிக முக்கியம்

உள்ளூர் போட்டிகளின் முக்கியத்துவம் தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் 100 சதவிகிதம் உள்ளூர் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 100 சதவிகிதம் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போது, உங்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷப் பந்த்தை அமைதியாக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால், உங்களுக்கு உள்ளூர் போட்டிகள் மிகவும் முக்கியம். மும்பை கிரிக்கெட்டை பொருத்தவரையில், சர்வதேச வீரர்கள் நேரம் கிடைக்கும்போது, உள்ளூர் போட்டிகளில் விளையாடுவர். உள்ளூர் போட்டிகளின் தரம் அந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது. தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.

ஐபிஎல் தொடரும் முக்கியம்தான்

ஐபிஎல் தொடரும் முக்கியமானதுதான். ஆனால், நான் உள்ளூர் போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். உள்ளூர் போட்டிகளின்போது, உங்களுக்கு சில யோசனைகள் கிடைக்கும். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வேறு எந்த ஒரு தெரிவும் கிடையாது.

18 ஆண்டுகள்

கடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரின் தொடக்கத்திலேயே ஓய்வு முடிவு குறித்து திட்டமிட்டுவிட்டேன். அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்கள் 18 ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதாக நினைக்கவில்லை. நிறைய இளம் பந்துவீச்சாளர்கள் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளனர். நான் அணியில் நீண்ட காலம் விளையாடியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இளம் வீரர்களுக்கு வழிவிட சரியான நேரம் வந்துவிட்டதாக நினைத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தேன்.

ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால்… வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியதென்ன?

பயிற்சியாளர் ஆக விரும்புகிறேனா?

தற்போது மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டே, மோஹித் அவஸ்தி மற்றும் ஷர்துல் தாக்குர் மூவரும் பிளேயிங் லெவனில் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். நிறைய இளம் பந்துவீச்சாளர்களும் அணியில் இணைய காத்திருக்கின்றனர். ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, பயிற்சியாளர் ஆகிவிடலாமா எனவும் யோசித்தேன். உள்ளூர் போட்டிகளில் இருந்து எனது ஓய்வானது சிறப்பானதாக அமைந்தது. ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக முதல் விக்கெட்டினையும், கடைசி விக்கெட்டினையும் கைப்பற்றினேன். உள்ளூர் போட்டிகளில் இருந்து விடைபெற எனக்கு கிடைத்த சரியான தருணமாக அதனை உணர்ந்தேன் என்றார்.

இந்தியா-ஆஸி. பாக்ஸிங் டே டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகம்!

18 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த தவால் குல்கர்னி கடந்த சீசன் ரஞ்சி கோப்பையுடன் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!