ஐபிஎல் 2025-ல் தோனி: அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்! முழுப் பட்டியல்

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் வரும் 2025 சீசனுக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள நேற்று கடைசி நாளாகும்.

ஒவ்வொரு அணியும் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 120 கோடிக்குள் 25 வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதில், அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் மற்றும் 2 அன்கேப் இந்திய வீரர்கள் இடம்பெற வேண்டும்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

முக்கிய அம்சங்கள்

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அன்-கேப்டு (தேசிய அணிக்காக விளையாடாதவர்/ஓய்வுபெற்று 5 ஆண்டுகள்) வீரராக களமிறக்கப்படுகிறார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், டூ பிளஸிஸ் ஆகிய வீரர்கள் தங்களது அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்முலம், லக்னௌ, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 4 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

10 அணிகள் மொத்தம் 46 வீரர்களை ரூ. 558.5 கோடிக்கு தக்கவைத்துள்ளனர்.

இதையும் படிக்க : உண்மையான ரசிகர்களுக்கு நன்றி! கான்வே உருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்(ரூ. 18 கோடி), இந்திய வீரர்கள் ஜடேஜா(ரூ. 18 கோடி), ஷிவம் துபே(ரூ. 12 கோடி), இலங்கை வீரர் பதிரனா(ரூ. 13 கோடி), மகேந்திர சிங் தோனி(ரூ. 4 கோடி).

தில்லி கேபிடல்ஸ்

அக்‌ஷர் படேல் (ரூ. 16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), அபிஷேக் பொரேல்(ரூ. 4 கோடி)

குஜராத் டைட்டன்ஸ்

கேப்டன் ஷுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), ரஷித் கான்(ரூ. 18 கோடி), சாய் சுதர்ஷன்(ரூ. 8.50 கோடி), ராகுல் திவாட்டியா(ரூ. 4 கோடி), ஷாருக் கான்(ரூ. 4 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரிங்கு சிங்(ரூ. 13 கோடி), வருண் சக்ரவர்த்தி(ரூ. 12 கோடி), சுனில் நரேன்(ரூ. 12 கோடி), ரசல்(ரூ. 12 கோடி), ரானா(ரூ. 4 கோடி), ராம்தீப் சிங்(ரூ. 4 கோடி)

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ்

பூரன்(ரூ. 21 கோடி), ரவி பிஸ்னொய்(ரூ. 11 கோடி), மாயன்க் யாதவ்(ரூ. 11 கோடி), மொஷின் கான்(ரூ. 4 கோடி), அயூஷ் பதோனி(ரூ. 4 கோடி)

மும்பை இந்தியன்ஸ்

கேப்டன் ஹர்திக் பாண்டியா(ரூ. 16.35 கோடி), ரோஹித் சர்மா(ரூ. 16.30 கோடி), பும்ரா(ரூ. 18 கோடி), சூர்யகுமார் யாதவ்(ரூ. 16.35 கோடி), திலக் வர்மா(ரூ. 8 கோடி)

பஞ்சாப் கிங்ஸ்

ஷஷங்க் சிங்(ரூ. 5.50 கோடி), பிரப்சிம்ரன் சிங்(ரூ. 4 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ்

கேப்டன் சஞ்சு சாம்சன்(ரூ. 18 கோடி), ஜெய்ஸ்வால்(ரூ. 18 கோடி), ரியான் பராக்(ரூ. 14 கோடி), துருவ் ஜுரேல்(ரூ. 14 கோடி), ஹெட்மெயர்(ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா(ரூ. 4 கோடி)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி(ரூ. 21 கோடி), பட்டிதர்(ரூ. 11 கோடி), யாஷ் யாதல்(ரூ. 5 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பேட் கம்மின்ஸ்(ரூ. 18 கோடி), அபிஷேக் சர்மா(ரூ. 14 கோடி), நிதீஷ் ரெட்டி(ரூ. 6 கோடி), கிளாசென்(ரூ. 23 கோடி), ஹெட்(ரூ. 14 கோடி)

மேலும், இந்த மாதம் நடைபெறவுள்ள மெகா ஏலத்தின் போது ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகத்தினர் தங்கள் அணியின் தக்கவைக்கப்படாத வீரர்களை மீண்டும் பெற முடியும்.

இரு வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ள பஞ்சாப் அணிக்கு மீதம் ரூ. 110.5 கோடி கையில் இருக்கும் நிலையில், இந்த மெகா ஏலத்தில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தமிழ்நாடு நாள்– தவெக தலைவர் விஜய் வாழ்த்து

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அசத்தல்! நியூசிலாந்து 235-க்கு ஆல் அவுட்!

இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!