ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் அமித் ஷா இன்று கலந்துரையாடல்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 15) புது தில்லியில் கலந்துரையாட உள்ளாா்.

இந்த உரையாடலின் போது ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் தங்களது பயிற்சி அனுபவங்களை மத்திய அமைச்சருடன் பகிா்ந்து கொள்வாா்கள்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்பதை பிரதமா் நரேந்திர மோடி நோக்கமாகக் கொண்டுள்ளாா்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் இளம் காவல் துறை அதிகாரிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனா். இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த 54 பெண்கள் உள்பட 188 இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அதிகாரிகள் முதலாவது கட்ட அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துள்ளனா்.

தில்லியில் பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படையினா் மற்றும் மத்திய காவல் நிறுவனங்களில் இரண்டு வார கால பயிற்சிக்குப் பிறகு ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் தங்களது பிரிவுகளில் 29 வாரகால மாவட்ட செய்முறைப் பயிற்சிக்கு உள்படுத்தப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது